கந்தனுனையே …..
பல்லவி
கந்தனுனையே வந்தனை புரிந்தேன்
எந்தனுக்கெப்போதுமருள் தர வேண்டியே
அனுபல்லவி
விந்தைகள் பல புரிந்த கேசவன் மருகனே
தந்தி வளர்த்தவளை மணந்த முருகனே
சரணம்
பந்த பாசமெனும் தளைகளைக் களைந்திட
உந்தனருளையே நாடி நின்றேன்
செந்தில் நாதனே கதிர்வேலா
தென்பரங்குன்றிலுறை சிவபாலா
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென்று என்று உற்று உனைநாளும்கண்டுகொண்டு அன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.
No comments:
Post a Comment