இன்னும் வராத்தேனோ…..
பல்லவி
இன்னும் வராததேனோ எனைக்காக்க
சென்ன கேசவனே ஶ்ரீராமா நீயும்
அனுபல்லவி
மன்னுபுகழ் கோசலையின் மணிவயிற்றில் பிறந்தவனே
புன்னகை முகத்தோனே பூரணசந்திரனே
சரணம்
மன்மதனைப் பிரமனைப் படைத்தவனே இன்னமுதே
பொன்னி நதிக்கரையில் கோயில் கொண்டிருப்பவனே
அன்னியரும் வணங்கும் வண்ணம் பேரெழில் கொண்டவனே
நன்னெறி வழி நடக்கும் மன்னவனே உத்தமனே
No comments:
Post a Comment