Monday, 8 January 2024

என்னுயிரே கேசவனே…..

நேற்று ஏதோவொன்றைத் தேடப்போய் கண்ணில் பட்டது இது. இதைப் பார்த்ததுமே சந்தக்கவி ஐயாவின் நினைவு பொங்கியது.  ஒரே பாடலை 22 வகையான  சந்தங்களாகப் பிரிக்கும் வகையில் ஒரு கலி விருத்த பாடலை எழுத வேண்டுமென ஒருமுறை சந்த வகுப்பில் கூறினார் சந்தக்கவி அய்யா. அதன்படி  காய் காய் காய் மா என்ற  வாய்ப்பாட்டில் நான் எழுதிய கலி விருத்தம்தான் பின்வரும் பாடல்   


உன்னழகு கண்டுவென தின்னுயிரு மேங்க 

புன்சிரிப்பு  பொற்கழலு  மென்விழியி  லாட 

சென்றவிட மெங்குமது  வின்பமது தந்து  

வன்குணமு மும்மலமு நீக்கிடுக  கண்ணா 

இதன் பொருள்:  கண்ணா  உன்னழகு  கண்டு  எனதுயிர்  ஏங்குகிறது உன்னை  அடைய.  உன்  புன்சிரிப்பும்    பொற்கழலணிந்த  கால்களும்  என்  விழியிலேயே   ஆடிக் கொண்டிருக்கிறது.  நான்  எங்கு  சென்றாலும்  அது  எனக்கு  இன்பம்  தந்து கொண்டிருக்க,  என்னிடத்திலுள்ள  தீய குணத்தையும் மும்மலங்களையும் நீக்கிடு.

    

                                       என்னுயிரே கேசவனே…..


                                                   பல்லவி

                             என்னுயிரே கேசவனே கண்ணபெருமானே

                             உன்னைச் சரணடைந்தேன் எனக்கருள் புரிந்திடுவாய்

                                                 அனுபல்லவி

                             என்னிடத்திலுள்ள தீய குணங்களையும்

                             கன்ம வினைகளையுமழித்திட வேண்டுமென

                                                        சரணம்

                             என் விழியில் மறையாமலாடிக் கொண்டிருக்குமுன்

                             புன் சிரிப்பும் பொன்னணிந்த தண்டைக்கால்களும்

                             என் மனத்தை இன்னமுமேங்கவிடாமல் செய்திட

                             உன்னருள் தருவாயே கமலக் கண்ணனே


                             

இந்தப் பதிவை என்னுடைய “ ப்ரிய சென்ன கேசவனின்” படம் கண்டவுடன், மனதை ஈர்த்தது. அந்த வேகத்தில் படித்து ரசித்தேன். அதில் வந்த உங்க சந்தக்கவிதையும் அதன் வெவ்வேறு சந்தங்களும் என்னை பிரமிப்படையச் செய்தது. ‘ஹேட்ஸ் ஆப் டு’ யுவர் சந்தக்கவி ஞானம். அதற்கொரு எசப் பாடல் எழத என்னுள் ஒரு ஆர்வம் எழுந்தது. அதன் விளைவு இதோ இந்தப் பாடல்.


          என்னுயிரே கேசவனே…..


                                          பல்லவி


                             என்னுயிரே கேசவனே கண்ணபெருமானே


                             உன்னைச் சரணடைந்தேன் எனக்கருள் புரிந்திடுவாய்


                                         அனுபல்லவி


                             என்னிடத்திலுள்ள தீய குணங்களையும்


                             கன்ம வினைகளையுமழித்திட வேண்டுமென


                                                 சரணம்


                             என் விழியில் மறையாமலாடிக் கொண்டிருக்குமுன்


                             புன் சிரிப்பும் பொன்னணிந்த தண்டைக்கால்களும்


                             என் மனத்தை இன்னமுமேங்கவிடாமல் செய்திட


                             உன்னருள் தருவாயே கமலக் கண்ணனே


நான் முறையாகத் தமிழ் பயின்றவனல்ல. அதனால் என் பாடலில் ஏதேனும் குற்றமிருந்தால் மன்னியுங்கள்🙏                     


No comments:

Post a Comment