எத்தனையா விதமாக……
பல்லவி
எத்தனையோ விதமாக உனைப்போற்றி பாடி விட்டேன்
அத்தனையும் வீணோ உத்தமனே ஶ்ரீராமா
அனுபல்லவி
மெத்தனமேன் கேசவனே ஶ்ரீமன் நாராயணனே
குத்தம் குறை நான் செய்ததென்னவோ
சரணம்
சத்தியம் தவறியேதும் இழிச்செயல் புரிந்தேனோ
சுத்தமின்றி ஆலயத்தில் சுற்றித் திரிந்தேனோ
வித்தகர்,வேதியரந்தணரைப் பழித்தேனோ
பெத்தவர் சொல் கேட்டு நடக்க மறந்தேனோ
நித்தியம் துதிப்பதிலேதும் குறை வைத்தேனோ
உத்தமி ஜானகி ஏதும் வத்தி வைத்தாளோ
சத்தமில்லாமல் தம்பி போட்டுக்கொடுத்தானோ
மொத்தத்தில் நான் செய்த தவறென்ன சொல்வாய்
हे रामा पुरुषोत्तमा नरहरे नारायणा केशवा।
गोविन्दा गरुड़ध्वजा गुणनिधे दामोदरा माधवा।।
हे कृष्ण कमलापते यदुपते सीतापते श्रीपते।
बैकुण्ठाधिपते चराचरपते लक्ष्मीपते पाहिमाम्।।
No comments:
Post a Comment