மாமறைகள்……
பல்லவி
மாமறைகள் போற்றும் சாமுண்டீச்வரியின்
தாமரைப் பதம் தனைப் போற்றித் துதித்தேன்
அனுபல்லவி
காமனைப் படைத்த கேசவன் சோதரி
பூமண்டலம் கொண்டாடும் திரிபுரசுந்தரி
சரணம்
நாமகள் பூமகள் பணிந்திடுமீச்வரி
நாமங்களாயிரம் உடைய நாராயணி
தேமதுரத்தமிழால் பாமாலை புனைந்து
தாமதமின்றி எனக்கருள வேண்டுமென
No comments:
Post a Comment