அம்பிகை நீயே……
பல்லவி
அம்பிகை நீயே அடைக்கலம் தருவாயே ( கமலா…) ( லலிதா….)
நம்பியுனைத்துதித்தேன் கேசவன் சோதரியே
துரிதம்
உம்பரும் முனிவரும் தேவேந்திரனுடன்
தும்புரு நாரதர் நரர் சுரர் வணங்கிடும்
அனுபல்லவி
அம்பலவாணன் சிவன் மனம் கவர்ந்தவளே
கழைவில்லும் மலரம்பும் கரங்களிலேந்திய
சரணம்
நிலவினையொத்த அருள் முகத்துடனே
முலை கனம் தாங்காது துவளுமிடைதனில்
விலை மதிப்பில்லா மேகலை குலுங்க
சிலையென பாசங்குசமுடன் நிற்கும்
முழுமதி நிகர்த்த முகம்அருள் பொழிய
முப்புர மெரித்த சிவன்மனம் நெகிழ
தழுவிய இடையில் மேகலை குலுங்க
தாளா நகில்கனம் இடைமெலத் துவள
கழைவில் லுடனே கடிமலர் அம்பும்
கையிலங் குசமும் பாசமும் தரித்து
தொழுதிடும் அடியோர் முன்வந் தருளும்
தேவி என்முன் நீவர வேண்டும் .
No comments:
Post a Comment