வேழம் தனில்……
பல்லவி
வேழம் தனில் பவனி வரும் முருகனைப் பணிந்தேன்
தோழனெனத் தமையனைத் தன்னிடத்தே கொண்டவனை
அனுபல்லவி
ஆழ் கடலில் துயிலுறும் கேசவன் மருகனை
ஊழ் வினையை வெல்ல எனக்குதவும் குமரனை
சரணம்
ஈழத்தில் கோயில் கொண்ட கதிர்காமக் கந்தனை
வீழும்படி சூரனைச் செய்த சீரலைவாய் நாதனை
கோழிக் கொடியோனை சிங்காரவேலனை
ஏழேழ் பிறவிக்குமெனக்கருள வேண்டுமென
No comments:
Post a Comment