सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज ।
अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः ॥
எல்லா தர்மமும்……
பல்லவி
எல்லா தர்மமமும் விட்டு விட்டேன் ஶ்ரீராமா
நல்லதே தருவாயென உனைச் சரணடைந்தேன்
அனுபல்லவி
வல்லரக்கர் பலரை அழித்த கேசவனே
அல்லலிடர் நீங்கச் செய்திடுவாயென வேண்டி
சரணம்
கல்லைக் காரிகையாய்ச் செய்த ரகுராமா
புல்லை ஆயுதமாயெய்தவனே பரந்தாமா
இல்லையென்று சொல்லாத வள்ளலே ராகவனே
சொல்லாலுனைப் பாடி மனமாரத் துதித்தேன்
அல்லும் பகலுமடியார் நலம் பேணும்
முல்லைப்பூ சிரிப்பும் முத்துப்பல் வரிசயும்
எல்லையிலாப் பேரழுகும் எடுப்பான தோள்களும்
வில்லை வளைத்துலகை வெல்லும் திறன் கொண்டவனே
No comments:
Post a Comment