உனையன்றி வேறு……
பல்லவி
உனையன்றி வேறு தெய்வம் எனக்கில்லை ஶ்ரீராமா
அனைத்தும் நீயெனவே அறிந்த பின்னாலே
அனுபல்லவி
தினையளவுனையே துதித்தால்லும் போதும்
பனையளவு பலன் தரும் கேசவனே மாதவனே
சரணம்
தினகரகுலத்தோனே தீனசரண்யனே
வனமாலை கௌஸ்துபமணிந்த ரகுராமனே
அனங்கனைப் பிரமனைப் படைத்த நாராயணனே
தினமுனைத் துதித்தேன் எனக்கருள் புரிவாய்
No comments:
Post a Comment