வந்தனம் ராமா…….
பல்லவி
வந்ததனம் ராமா சந்ததமுனைத் துதித்தேன்
பந்தனம் செய்து பாலமமைத்தவனே
அனுபல்லவி
சந்திர முகத்தோனே சாகசம் பல செய்தவனே
இந்திரனும் வணங்கும் திருவடியுடையவனே
சரணம்
மந்தரமலைமையை மத்தாகச் செய்து
தந்திரமாயமரருக்கு அமுதளித்தவனே
உந்திகமலனே மந்திகளின் நேசனே
நிந்தித்த அரக்கரை வதைத்த சுகுமாரனே
சத்திய நெறிகாத்த உத்தமனே ஶ்ரீராமா
நித்திலத் தொத்தெனும் பெயருடையவனே
பத்தரை மாற்றுப் பசும் பொன்னே மணியே
கத்தும் கடல் நடுவே கிடந்துறங்கும் மாலவனே
கபந்தனையழித்தவனே கேசவனே மாதவனே
நிபந்தனைகளற்ற நட்பையளிப்பவனே
உபேந்திரனெனும் நாம முடையவனே
சபரிக்கருள்தந்த சாந்த மூர்த்தியே
No comments:
Post a Comment