எங்கிருக்கிறாய் ராமா…..
பல்லவி
எங்கிருக்கிறாய் ராமா நீ எங்கிருக்கிறாய்
சங்கும் சக்கரமுமேந்திய சென்ன கேசவனே
அனுபல்லவி
திங்கள் திருமுகத்தோனே கமலநாபனே
மங்காத புகழ் மேவும் தினகர குலத்தோனே
சரணம்
பங்கய மலரமர் வாகீச்வரி வடிவிலா
மங்கை ஜானகியின் உருவிலோ இல்லை
சிங்கவாகனமமர் சங்கரியாகவோ
சங்கரனோ அயனோ நாராயணனாகவோ
நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயமென
பஞ்ச பூதங்களாகவோ பாதாள உலகிலோ
சிலை வடிவாக இந்த அயோத்தி கோயிலிலோ
நிலையிலாப் புவியில் நிலைத்திருப்பவனே
No comments:
Post a Comment