சிலம்போசையொலிக்க…..
பல்லவி
சிலம்போசையொலிக்க நடந்து வரும் ராமாவுன்
சலங்கையொலி கேட்டு மகிழ்ந்தாளே கோசலையும்
அனுபல்லவி
கல கலவெனச்சிரித்து நீ தளர் நடை போட
கிளிங் கிளிங்கென்றுன் கால் தண்டை குலங்க
சரணம்
பொல பொலவெனவே நீ சரியும் வேளையிலே
சல சலவென்றோடி வந்துன் தாயெடுத்து மடிவைக்க
உலகேழுமதைக்கண்டு கொண்டாடி மகிழ
சில வார்த்தை சொல்லியுனைத் தாயணைத்துக்கொண்டாள்
நிலவைப் பழிக்கும் முகமும் கொவ்வைச்செவ்வாயும்
சலவைக் கல்லில் செதுக்கியது போல் நாசியும்
திலகமிட்ட நுதலும் அலையெனக் கேசமும் கொண்ட
நலம் தரும் கேசவனே உனைக்கண்டு துதித்தேன்
ठुमक चलत रामचंद्र बाजत पैजनियाँ॥
किलकि किलकि उठत धाय गिरत भूमि लटपटाय।
धाय मात गोद लेत दशरथ की रनियाँ॥
अंचल रज अंग झारि विविध भांति सो दुलारि।
तन मन धन वारि वारि कहत मृदु बचनियाँ॥
विद्रुम से अरुण अधर बोलत मुख मधुर मधुर।
सुभग नासिका में चारु लटकत लटकनियाँ॥
तुलसीदास अति आनंद देखके मुखारविंद।
रघुवर छबि के समान रघुवर छबि बनियाँ॥
No comments:
Post a Comment