எல்லாமுமான…..
பல்லவி
எல்லாமுமான உனை நானும் ஶ்ரீராமா
கல்லாலான சிலையென்று நினைப்பேனோ
அனுபல்லவி
பல்லாயிரமாண்டு முன்னமிவ்வயோத்தியில்
நல்லவண்ணம் பிறந்து நாடாண்ட ராகவனே
சரணம்
மல்லரை மாட்டிய கேசவனும் நீயே
பொல்லாத ராவணனை வதைத்தவனும் நீயே
நல்லரவின் மீதுறங்கும் நாராயணனும் நீயே
சொல்லாலுனைப்பாடி மனமாரத்துதித்தேன்
No comments:
Post a Comment