உன்னையே நினைந்துருகும்……..
பல்லவி
உன்னையே நினைந்துருகும் என்னைக் காத்தருள
இன்னுமென்ன தயக்கம் ஓ ஶ்ரீராமா
அனுபல்லவி
சென்ன கேசவனே பன்னகசயனனே
புன்னகை முகத்தோனே புவியாளும் மன்னவனே
சரணம்
சந்திரனைப் பழிக்குமழகு முகமுடைவனே
ஶ்ரீராமச்சந்திரனே சீதையின் நாயகனே
இந்திராதி தேவர்களும் மூவுலகும் பணிந்தேத்தும்
சுந்தரனே சூரிய குலத்தோனே ரகுவரனே
மந்தரையின் சூழ்ச்சியால் கானகம் சென்றவனே
தந்தை சொல் காத்தவனே தசரத குமாரனே
விந்தைகள் பல செய்த விஜயராகவனே
உந்தி கமலனே ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment