உத்தமியே…..
பல்லவி
உத்தமியே ரத்தினமே ஶ்ரீலலிதாம்பிகையே
சித்திரத்திலுனைக்கண்டு பக்திப் பரவசமானேன்
அனுபல்லவி
முத்தே மோகனமே கேசவன் சோதரியே
பத்தரைமாற்றுப் பசும் பொன்னே மாணிக்கமே
சரணம்
நித்திலமே மரகதமே ஒளிதரும் வைடூரியமே
வித்தகர் போற்றும் தத்துவப் பொருளே
நீல நிறத்தாளே பவளவாய்ப் பைங்கிளியே
ஆலமுண்ட கண்டனிடமமர்ந்த கோமேதகமே
No comments:
Post a Comment