யயோ பீடாயந்தே விபுதமுகுடீனாம் படலிகா:
யயோ: ஸௌதாயந்தே
ஸ்வயமுதபாஜோ பணிதய: |
யயோர் தாஸாயந்தே ஸரஸிஜ
பவாத்யா: சரணயோ:
தயோர்மே காமாக்ஷ்யா : தினமது வரீவர்து ஹ்ருதயம் ||
இது மூகபஞ்சாசதி லே பாதாராவிந்த சதகத்திலே 6 வது ஸ்லோகம் . ரொம்ப அழகா சொல்லிருக்கார் மூகர் ! தேவதைகளின் மகுடங்களின் வரிசைகள் எவற்றிற்கு உப்பரிகையோ, நான்முகன் போன்றவர் எந்தப் பாதங்களுக்கு தாஸர்களோ, அந்தப் பாதங்களில் என் மனம் லயிக்கட்டும் !கிட்டத்தட்ட இதே அர்த்தத்தில் சௌந்தர்ய லஹரி 25 வது ஸ்லோகம் த்ரயாணாம் தேவானாம் என்று தொடங்கும் ஸ்லோகம் இதே பொருள் கொண்டது !தேவியின் பாதத்தில் மும்மூர்த்திகளும் கைகளைக்குவித்து வணங்கிக் கொண்டிருப்பதால், தேவிக்கு அர்சித்த புஷ்பங்கள் மூன்று தேவர்களையும் பூஜித்ததாகிறது என்று தேவியின் பாதங்களை எப்படி ஸகல தேவர்களும் பூஜிக்கிறார்கள் என்ற அழகான கருத்துள்ள ஸ்லோகம் ! உத்யோக உயர்வு, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை அமைவது இந்த ஸ்தோத்ரம் பாராயணத்தின் பலன் !!
ஶ்ரீ காமாக்ஷி சரணம் !
ययोः पीठायन्ते विबिधमुकुटीनां पटलिका
ययोः सौधायन्ते स्वयमुदयभाजो भणितयः ।
ययोर्दासायन्तेसरसिजभवाद्याश्चरणयो-
स्तयोर्मे कामाक्ष्या दिनमनु वरीवर्तु हृदयम् ॥६॥
Let my heart meditate daily on the lotus-feet
of Kamakshi which has the rows of crowns of celestials (who bow down at the
feet) as peetha ( foot-stool on which the feet are paced), the words of praise
which spontaneously arise from their hearts as the palace and Brahma and other
celestials as servants.
தேனார்மொழியாளே…
பல்லவி
தேனார்மொழியாளே தாயே காமாக்ஷி
தீனனென் மனத்தில் லயித்திட வேண்டினேன்
அனுபல்லவி
மான்விழியாளே கேசவன் சோதரியே
வானுறைக் கடவுளரனைவரும் பணிந்திடும்
சரணம்
நான்முகன் கேசவன் நமச்சியான்
அணிந்த அழகிய மணி மகுடங்களும்
தானே தோன்றிய எழுதா மறைகளும்
தஞ்சமடைந்த உன் தாமரைத் திருவடிகள்
No comments:
Post a Comment