அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே.....
ஸம்ஸ்காரத: கிமபி கன்தலிதான் ரஸஜ்ஞ-
கேதாரஸீம்னி ஸுதியாமுபபோகயோக்யான் |
கல்யாணஸூக்திலஹரீகலமாம்குரான்ன:
காமாக்ஷி பக்ஷ்மலயது த்வதபாங்கமேக: ||13||
கடாக்ஷ சதகம்.
ஹே காமாக்ஷி! உனது கடாக்ஷமாகிற மேகமானது எனது நாவாகிற வயலில் தவறாமல் மாரியெனப் பெய்ததால் முளைத்தவைகளும், புத்திமான்களுக்கு அனுபவிக்கத் தக்கவைகளுமாகிய மங்களகரமான கவிசக்தியாகிற சம்பா பயிர்களை செழுமையாய் வளரச் செய்யட்டும். அம்பிகையின் கடாக்ஷம் கிடைக்கப்பெற்ற ஒருத்தருக்கு ச்ரேஷ்டமான கவிதாசக்தி ஏற்படும் என்பது தாத்பர்யம்..
संस्कारतः किमपि कन्दलितान् रसज्ञ-
केदारसीम्नि सुधियामुपभोगयोग्यान् ।
कल्याणसूक्तिलहरीकलमाङ्कुरान्नः
कामाक्षि पक्ष्मलयतु त्वदपाङ्गमेघः ॥13॥
ஸம்ஸ்காரத: கிமபி கன்தலிதான் ரஸஜ்ஞ-
கேதாரஸீம்னி ஸுதியாமுபபோகயோக்யான் |
கல்யாணஸூக்திலஹரீகலமாம்குரான்ன:
காமாக்ஷி பக்ஷ்மலயது த்வதபாங்கமேக: ||13||
காமாக்ஷியே! உன் கடைக்கண் அருளாம் மேகம் எனது நா வயலுள், தவறாமல் மாரியெனப் பெய்ததால், முளைத்தவைகளும், அறிவாளர்கள் உய்த்துணர்ந்து பயன்கொள்ளும்படியான, மங்களமான கவிதை புனையும் திறனால் நல்லுரைகளாம் பயிர்களை வளரச் செய்யட்டும்.
நாவாம் வயலினுள் நாரமுண் மேகமாய் நற்பொழிவு
தேவிகா மாட்சியுன் தேசாம்க டைவிழிச் செய்வதுவாம்;
மேவுமச் செம்மையால் மெய்ஞா னியர்கள் விதந்துணர
பாவினால் நல்லுரைகள் பல்கிடச் செய்வாய் பயிரென்றே
நாரம் - நீர்; தேசு - ஒளிர்; பல்கு - மிகுதியாக; விதந்து - சிறப்பாய்
அடைக்கலமென……
பல்லவி
அடைக்கலமென உனையே சரணடைந்தேன் காமாக்ஷி
இடைமெலிந்தவளே காஞ்சிபுர நாயகியே
அனுபல்லவி
படைநடுங்கும் பாம்பணிந்த ஏகாம்பரேச்வரன்
விடைவாகனனிடமமர்ந்த ஈச்வரியே
சரணம்
கடைக்கண்ணாமருள் மேகம் நாவென்னும் வயலில்
அடை மழையாய் பொழிந்து சம்பாப் பயிரென்னும்
இடைப்பயிராயறிஞர்கள் புகழ்ந்தேத்தும் கவி நானும்
படைக்கும் படிச் செய்தாயே கேசவன் சோதரியே
No comments:
Post a Comment