மாதா மரகதச்யாமா
மாதங்கீமதசாலினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ
கதம்ப வனவாஸினீ
ஜய மாதங்க தனயே
ஜய நீலோத்பலத்யுதே
வண்ணமயமானவளே….
பல்லவி
வண்ணமயமானவளே வடிவாம்பிகையே
தண்மதி பிறையணிந்த உனையே துதித்தேன்
அனுபல்லவி
பண்ணிசையை ரசிப்பவளே கடம்பவனத்தமர்ந்தளே
பெண்ணணங்கே பேரெழிலே கேசவன் சோதரியே
சரணம்
மரகதமே கருநீல நிறத்தவளே தாயே
நீலோத்பல மலரின் காந்தியுடையவளே
மதங்கரின் புதல்வியே கிளியேந்தும் கரத்தாளே
கல்யாணி உந்தன் கடைக்கண்ணருள் தருவாயே
No comments:
Post a Comment