பத்ரகாளியின்…..
பல்லவி
பத்ரகாளியின் பதமலர் பணிந்தேன்
நித்தமும் எனக்கருள வேண்டுமெனத்துதித்து
துரிதம்
தொங்கும் நாக்கும் கரங்களீரைந்தும்
கதை கத்திக் கேடயம் திரிசூலம் வில்
அறுந்த தலையும் கரங்களிலேந்தி
கபாலமாலையை க்கழுத்திலணிந்த
அனுபல்லவி
சித்தரும் முனிவர்களும் ஞானியரும் வணங்கிடும்
உத்தமியை பத்மினியைக் கேசவன் சோதரியை
சரணம்
வித்தகர் வேதியர் போற்றும் ஶ்ரீகரி
உத்தரகோசமங்கை மங்களாம்பிகையவள்
இத்தரை மாந்தர்கள் பணியும் ஜகதீச்வரி
தத்துவப்பொருளவளை சித்தத்திலிருத்தி
No comments:
Post a Comment