"புழுவெனப் பிறப்பினில் உழலுறும் எனக்குறு
பழவினை தொலைத்திடும் வடிவேலா
கழுவினிலுறச் சமணரை விடு கவித்துவ
கவுணிய குலத்துவப் பெரு வாழ்வே
மழுபிடி சுரத்தவர் தருகுஹ! குறத்தியை
மகிழ்வுடன் அணைத்தருள் முருகோனே!
தொழுமடியவர்க்கருள்புரி கர விருப்பொடு
பழனியில் உதித்திடும் பெருமாளே.”
“ஆண்டவன் பிச்சை அம்மா எழுதியது”
பழனியில்….
பல்லவி
பழனியில் எழுந்தருளிக் காட்சி தரும் குமரா
கழலடி பணிந்தேன் காத்தருள்வாயே
அனுபல்லவி
அழகன் கேசவன் விரும்பிடும் மால் மருகா
மழுவேந்தும் சிவபெருமான் மகனே ஆறுமுகா
சரணம்
தழுவிடும் குறமகள் மனங்கவர்ந்தோனே
விழுமியப் பொருளாய் விளங்கும் வேலவனே
பழவினைப் பயன் தொலைய உனையே வேண்டினேன்
தொழுதுடுமடியார்க்கு அருள் தரும் குகனே
No comments:
Post a Comment