சாந்தா…..
பல்லவி
சந்தா பவானி எனுமுனைப் பணிந்தேன்
மாந்தளிர் மேனியாளே கேசவன் சோதரி
அனுபல்லவி
காந்தத்தின் பின் செல்லும் ஊசிபோலெனையே
உந்தன் பின் தொடரும் வரமருள்வாயே
சரணம்
மாந்தர்களனைவரும் தாள் பணிந்தேத்தும்
ஏந்திழையே திரிபுரசுந்தரியே
சாந்தமாய் வீற்றிருக்கும் காமக்ஷி தாயே
தீந்தமிழ் சொல்லாலுனைப் பாடித்துதித்தேன்
No comments:
Post a Comment