இன்று பௌர்ணமி அல்லவா? கவிகள் சந்திரனை தேவியின் முக மண்டலத்துக்கு ஒப்புவமை கூறி வர்ணிப்பது அறிவோம் ! அவள் மந்தாஹாச வதனியாக இருக்கும் கோலத்தை மூகர் எப்படி வர்ணிக்கிறார் பார்ப்போமா?
ஶ்ரீ காமாக்ஷி முகேந்து பூஷணமிதம் மந்தஸ்மிதம் தாவகம்
நேத்ரானந்தகரம் ததா ஹிமகரோ கச்சேத்யதா திக்மதாம் |
சீதம் தேவி ததா யதா ஹிமஜலம் ஸந்தாப முத்ரா ஸ்பதம்
ச்வேதம் கிஞ்ச ததா யதா மலினதாம் தத்தே ச முக்தாமணி: ||
அம்பாள் புன்சிரிப்புக்கு எதிரில் சந்திரன் உஷ்ணமளிப்பவனாகவும், பனிநீர் கூட தாபத்தைத் தணிக்காமல் சூடாகவும் வெண்மை மிக்க உயர்ந்த நல் முத்துக்கள் கூட அவள் புன்சிரிப்புக்கு முன்னால் ஒளி குன்றி அழுக்கடைந்த காணப்படுகிறது ! அதனால் அவள் மந்தாஹாசத்துக்கு என்னும் ஒளிக்கூட்டத்தின் முன் எதையும் உவமையளிக்க முடியாது என்று சொல்கிறார் !
ஆதி சங்கரர் இதைக் கொஞ்சம் மாற்றி வர்ணிக்கிறார் சௌந்தர்ய லஹரியின் 63 வது ஸ்லோகத்தில் !
தாயே உன் முகமே சந்திரன்; உன் புன்சிரிப்பே வெண்ணிலா என்று எண்ணி சகோரப் பக்ஷிகள் உன் இனிதான புன்சிரிப்பாகிய வெண்ணிலவை அதிகமாகப் பருகியதால் திகட்டிவிடுகிறது! அதற்கு மாற்றாக புளிப்பு பானம் செய்ய விரும்பி, சந்திரனின் அமுதப்பெருக்கை புளித்தநீர் என்று நினைத்து அருந்துகிறதாம்!
ஸ்மிதஜ்யோத்னா ஜாலம் என்ற ஸ்லோகத்தில் இப்படி வர்ணிக்கிறார் ஆசார்யாள் !
ஜய ஜய ஜகதம்ப சிவே... Thanks Saraswathi Thyagarajan !
தேவியுன்….
பல்லவி
தேவியுன் புன் சிரிப்பை சகோரப் பறவைகள்
நிலவெனப் பருகித்திகட்டியதாலே
அனுபல்லவி
தாவியதனமுதப் பெருக்கைப் புளிநீராய்க்
கருதிக் குடித்ததே கேசவன் சோதரி
சரணம்
அம்பிகையின் மந்தஹாசத்தின் முன்னே
அம்புலியின் கிரணம் வெப்பமளிக்கிறது
நல் முத்தும் ஒளியின்றி அழுக்காய்த் தெரிகிறது
பனித்துளி கூட சூடாகத் தெரிகிறது
No comments:
Post a Comment