ஆதி பராசக்தியுன்….
பல்லவி
ஆதி பராசக்தியுன் அரவிந்த பதம் பணிந்தேன்
சோதியாய்ச்சுடராய் இருப்பவளும் நீயே
துரிதம்
ஆதித்தனம்புலி அங்கி குபேரன்
போதிற் பிரமன் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
தீதிலாத மலையரசன் மகளே
சாதித்த புண்ணியர்க்கு காட்சியளிப்பவளே
சரணம்
வேதியரோதிடும் மந்திரப் பொருளே
ஆதியுமந்தமுமில்லாத பரம்பொருளே
பாதி மதியணிந்த பரமேச்வரியே
மேதினி போற்றும் கேசவன் சோதரியே
No comments:
Post a Comment