अभिरामिस्तोत्रम्
नमस्ते ललिते देवि श्रीमत्सिंहासनेश्वरि ।
भक्तानामिष्टदे मातः अभिरामि नमोऽस्तुते ॥ १॥
चन्द्रोदयं कृतवती ताटङ्केन महेश्वरि ।
आयुर्देहि जगन्मातः अभिरामि नमोऽस्तुते ॥ २॥
सुधाघटेशश्रीकान्ते शरणागतवत्सले ।
आरोग्यं देहि मे नित्यमभिरामि नमोऽस्तुते ॥ ३॥
कल्याणि मङ्गलं देहि जगन्मङ्गलकारिणि ।
ऐश्वर्यं देहि मे नित्यमभिरामि नमोऽस्तुते ॥ ४॥
चन्द्रमण्डलमध्यस्थे महात्रिपुरसुन्दरि ।
श्रीचक्रराजनिलये अभिरामि नमोऽस्तुते ॥ ५॥
राजीवलोचने पूर्णे पूर्णचन्द्रविधायिनि ।
सौभाग्यं देहि मे नित्यमभिरामि नमोऽस्तुते ॥ ६॥
गणेशस्कन्दजननि वेदरूपे धनेश्वरि ।
विद्यां च देहि मे कीर्तिमभिरामि नमोऽस्तुते ॥ ७॥
सुवासिनीप्रिये मातः सौमाङ्गल्यविवर्धिनी ।
माङ्गल्यं देहि मे नित्यमभिरामि नमोऽस्तुते ॥ ८॥
मार्कण्डेय महाभक्त सुब्रह्मण्य सुपूजिते ।
श्रीराजराजेश्वरी त्वं ह्यभिरामि नमोऽस्तुते ॥ ९॥
सान्निध्यं कुरु कल्याणी मम पूजागृहे शुभे ।
बिम्बे दीपे तथा पुष्पे हरिद्राकुङ्कुमे मम ॥ १०॥
अभिराम्या इदं स्तोत्रं यः पठेच्छक्तिसन्निधौ ।
आयुर्बलं यशो वर्चो मङ्गलं च भवेत्सुखम् ॥ ११॥
इति अभिरामिस्तोत्रं सम्पूर्णम् ।
ஸ்ரீ அபிராமி ஸ்தோத்ரம்
நமஸ்தே லலிதே மி தேவி
ஸ்ரீமத் ஸிம்ஹாச நேஸ்வரி |
பக்தானாம் இஷ்ட தேஹிமி மாத:ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே ||
ஸ்ரீ லலிதையே, உனக்கு நமஸ்காரம். தேவி, எழில்மிகு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! அடியார்கள் கோருவதைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்.
சந்த்ரோதயம் கிருதவதி
தாடங்கேன, மஹேஸ்வரி |
ஆயுர்தேஹி ஜகன்மாத:
ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே ||
மகேஸ்வரி, ஒரு தாடங்கத்தின் மூலம் முழு நிலவை உண்டாக்கக் கூடியவள் நீ. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்.
ஸுதா கடேச ஸ்ரீ காந்தே
சரணாகத வத்ஸலே |
ஆரோக்யம் தேஹிமே நித்யம
ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே ||
அமிர்தகடேஸ்வரனை காந்தனாக அடைந்து சரணடைந்தவர்களைக் காப்பாற்றும் வாத்சல்ய சுபாவம் உள்ளவளே... அம்மா, அபிராமியே உனக்கு நமஸ்காரம். எனக்கு நாளும் நல்ல ஆரோக்கியத்தை அருளுவாய்!
கல்யாணம் மி மங்களம் தேஹி
ஜகத் மங்கள காரிணி |
ஐஸ்வர்யம் தேஹிமே நித்யம்
ஸ்ரீ அபிராமி நமோஸ்து தே ||
கல்யாணி, மங்களத்தைக் கொடுப்பவளே! சர்வலோகங்களையும் மங்களகரமாக்குபவளே! நிலையான ஐஸ்வர்யம் கிடைக்கும்படி செய்வாயாக. அபிராமித்தாயே உனக்கு நமஸ்காரம்.
சந்த்ர மண்டல மத்யஸ்தே
மகாத்ரிபுர சுந்தரி |
ஸ்ரீ சக்ரராஜ நிலயே ஹி
ஸ்ரீ அபிராமி நமோஸ்து தே ||
சந்திர மண்டலத்தின் நடுவே அமர்ந்த மகாதிரிபுரசுந்தரி நீயே அல்லவா!
ஸ்ரீ சக்ரராஜதானியின் அரசியான அபிராமியே உனக்கு நமஸ்காரம்.
ராஜீவ லோசனே, பூர்ணே
பூர்ண சந்த்ர விதாயினி |
சௌபாக்யம் தேஹி நித்யம்
ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே ||
தாமரை போன்ற கண்ணழகியே! முழுமையானவளே, முதன்மையானவளே, முழு நிலவைக் காட்டுபவளே, எனக்கு எப்பொழுதும் சௌபாக்கியத்தை அருளுவாயாக! ஸ்ரீ அபிராமியே, உனக்கு நமஸ்காரம்.
கணேச ச ஸ்கந்த ஜநநி
வேதரூபே, தனேஸ்வரி
வித்யாம் ச தேஹிமே நித்யம்
ஸ்ரீ அபிராமி மி நமோஸ்து தே |
ஆனைமுகனுக்கும் ஆறுமுகனுக்கும் அன்னையே, வேதசொரூபியே! செல்வத்துக்கு ஈஸ்வரியே... எனக்கு வித்யையில் கீர்த்தியைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்.
ஸுவாஸிநிப்ரியே மாதா:
ஸௌமாங்கல்ய விவர்த்தினி
மாங்கல்யம் தேஹிமே நித்யம்
ஸ்ரீஅபிராமிமி நமோஸ்துதே|
சுவாசினிகளால் போற்றப்படுபவளே. சௌமாங்கல்யப் பதவியை அதிகரிப்பவளே (பெண்கள் கணவருடன் வாழும் காலத்தை அதிகரிக்கச் செய்பவளே.) எனக்கு நித்யசௌ மாங்கல்யத்தை அருள்வாய் தாயே...! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!
மார்க்கண்டேய மஹாபக்த
ஸுப்ரமண்ய ஸுபூஜிதே |
ஸ்ரீராஜராஜேஸ்வரி த்வம் ஹி
ஸ்ரீஅபிராமி நமோஸ்து தே ||
மார்க்கண்டேயராலும் மகாபக்தரான சுப்ரமண்யராலும் (அபிராமி பட்டர்) நன்கு பூஜை செய்து வழிபடப்பட்டவளே! ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நீயே அல்லவா... ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!
ஸாந்நித்யம் குரு கல்யாணி
மமபூஜா க்ருஹே சுபே |
பிம்பே தீபே ததா புஷ்பே
ஹரித்ராகுங்குமே மம ||
கல்யாணியே (மங்களம் அருள்பவளே) என்னுடைய பூஜாகிரகத்தில் உள்ள திவ்யமான உனது பிம்பம், தீபம், புஷ்பம் மற்றும் மஞ்சள் குங்குமத்தை உன்னருளால் சாந்நித்தியமடையச் செய்வாயாக. (உனதருள் நிறைந்ததாக ஆக்குவாயாக)
ஸ்ரீஅபிராம்யா இதம் ஸ்தோத்ரம்
ய: படேத் சக்தி சந்நிதௌ |
ஆயுர் பலம் யசோ வர்ச்சோ
மங்களம் ச பவேத்ஸுகம் ||
ஸ்ரீஅபிராமியன்னையின் இந்தத்துதியினை அகம் ஒன்றி தினம் சொல்பவர்க்கு ஆயுள், பலம், கீர்த்தி, ஆரோக்யம், இவற்றோடு சகல சௌபாக்யமும் கிடைக்குமென்பது நிச்சயம்.
சிம்மாசனத்தில்……
பல்லவி
சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே
ஶ்ரீ லலிதாம்பிகையே உனைப் பணிந்தேன்…(கனக…)
அனுபல்லவி
அம்பிகையே அபிராமி தண்டனிட்டேன் தாள் பணிந்தேன்
அடியார்கள் கோரும் வரம் தருபவளே
சரணங்கள்
தாடங்கம்தனை வீசி முழு நிலவு தந்தவளே
நாடித்துதித்திப்பவர்க்கு நீண்ட ஆயுளளிப்பவளே
அமிர்தகடேச்வரனை சரணடைந்தோரை
அரவணைத்துக் காக்கும் குணமுடையவளே
மங்களமளிப்பவளே கேசவன் சோதரி
தங்கும் பொருள் தருவாய் தாயே கல்யாணி
திருச்சக்கரம் தனில் வீற்றிருப்பவளே
சந்திரமண்டலத்தின் நடுவிலிருப்பவளே
அரவிந்த மலர் போன்ற அழகுக்கண்ணுடையவளே
பரம்பொருளே முழுமதி தோற்றுவிக்கும் பூரணியே
சகல பாக்கியமும் எனக்கருள வேண்டினேன்
அபிராமி அன்னையே உன்னையே தினம் துதித்தேன்
முருகன் கணபதி இருவருக்குமன்னையே
மறை பொருளே மாயே தனங்களின் அதிபதியே
கலை கல்வியனைத்தும் எனக்களிக்க வேண்டி
அபிராமி அன்னையே உன்னையே தினம் துதித்தேன்
சுமங்கலிகள் தினம் துதிக்கும் தாயே பரமேச்வரியே
மாங்கல்ய பலமருளும் மங்களாம்பிகையே
நித்ய மங்கலம் தரும் நித்ய கல்யாணியே
அன்னை அபிராமியே உன்னைச்சரண்டைந்தேன்
உனதடியார் சுப்பிரமணிய பட்டரும்
மார்க்கண்டேயரும் அனுதினம் துதித்திடும்
அன்னையே ஶ்ரீ ராஜ ராஜேச்வரியே
உன்னையே அருள் வேண்டி அனுதினம் துதித்தேன்
உன்னையே அருள் வேண்டி அனுதினம் துதித்தேன்
தினமுனைத்துதிக்கும் என் பூஜையறையிலுள்ள
அனைத்துப் பொருள்களிலுமுன்னெழில் படத்திலும்
எழுந்தருளி ஆசி தந்து எனைக்காத்தருளென
மனமாரத் துதித்து உனை நமஸ்கரித்தேன
அன்னை அபிராமியின் இத்துதி படிப்பவர்க்கு
நன்னலம் கீர்த்தி ஆயுளாரோக்கியம்
இன்னும் சகல சௌபாக்கியங்களும்
உனதருளால் கிடைக்கும் வரமும் வேண்டி
No comments:
Post a Comment