5.தை கடை
வெள்ளி ஸ்பெஷல்
"பீயூஷம் தவ மந்தர ஸ்மிதமிதி வ்யர்தைவ ஸாऽபி(ப) ப்ரதா
காமாக்ஷி த்ருவமீத்ருʼஶம் யதி பவேதேதத் கதம் வா ஶிவே
மந்தாரஸ்ய கதாலவம் ந ஸஹதே மத்னாதி மந்தாகினீம்
இந்தும் நிந்ததி கீர்திதே ச கலஶீ பாதோதிமீர்ஷ்யாயதே"
पीयूषं तव मन्थरस्मितमिति व्यर्थैव सापप्रथा
कामाक्षि ध्रुवमीदृशं यदि भवेदेतत्कथं वा शिवे ।
मन्दारस्य कथालवं न सहते मथ्नाति मन्दाकिनी-
मिन्दुं निन्दति कीर्तितेஉपि कलशीपाथोधिमीर्ष्यायते ॥29॥
மூக பஞ்ச சதீ.....
மந்தஸ்மித சதகம்....
"மங்களமானவளே! காமாக்ஷி! சிவ வல்லபே!! அம்மா!! உன்னுடைய மென்னகை அம்ருதம் தான் எனுமந்த புகழ்ச்சியும் வீணே!! அவ்வாறு அது உண்மையாயின், மந்தார மலர் என்னும் சொல்லைக்கூட ஏன் உனது புன்னகை பொறுப்பதில்லை!? கங்கையை கலக்குவானேன்? நிலவைப் பழிப்பதேன்? பாற்கடலென்றாலே பொறாமை கொள்வதேன்?"
மங்கலச் செல்வியே….
பல்லவி
மங்கலச்செல்வியே காமாக்ஷி தாயே
பங்கயமே உந்தன் அரவிந்த பதம் பணிந்தேன்
அனுபல்லவி
சங்கரி சாம்பவி கேசவன் சோதரியே
பொங்கரவுக் குடையணிந்த சிவகாமேச்வரியே
சரணம்
திங்களையும் கங்கையையும் மந்தாரமலரையும்
திருப்பாற்கடலையுமே பழிப்பதினாலுன்
புன்னகையை அமுதமென சொல்வதும் வீணே
மென்னகையே அவையனைத்திலும் சிறந்தது
No comments:
Post a Comment