ஶ்ரீ ராமாஞ்சநேயனை…
பல்லவி
ஶ்ரீ ராமாஞ்சநேயனை அனுமனை
வாயு குமாரனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
ஆராவமுதன் கேசவன் திருவடியை
ஓர் கணமும் நீங்காது உடனிருப்பவனை
சரணம்
ஶ்ரீராமச்சந்திரனின் தூதனாய்ச் சென்று
கார்குழலாள் சீதைக்கு கணையாழி தந்தவனை
சூரியனைக் கனியென உண்ணப் புகுந்தவனை
பாரோர் பணிந்தேத்தும் சிறிய திருவடியை
No comments:
Post a Comment