மஞ்சள் நீராடி…..
பல்லவி
மஞ்சள் நீராடி மகிழ்வுடனே காட்சி தரும்
அஞ்சுகமே மதுரகாளியுனைத் துதித்தேன்
அனுபல்லவி
வெஞ்சமரில் அரக்கன் மகிடனை மாய்த்தவளே
கஞ்சனக் காய்ந்த கேசவன் சோதரியே
சரணம்
பஞ்சஞ்சு மெல்லடியார் பணிந்திடும் பைரவியே
நஞ்சுண்ட கண்டன் மனங்கவர் நாயகியே
அஞ்சம்பு வைத்திருக்கும் அழகிய கரத்தாளே
தஞ்சம் நீயெனவே தாள் பணிந்தேனருள்வாய்
No comments:
Post a Comment