கேசவ மாதவ…..
பல்லவி
கேசவ மாதவ கோவிந்தா கண்ணா
நேசமுடன் கண்டு பரவசித்தேன்
அனுபல்லவி
ஈசனே எளியோரின் நேசனே வாமனா
தாசனுனைப் பணிந்தேன் எனைண்டருள்வாய்
சரணம்
கமல நாபனே கமலக்கண்ணனே
அமரரும் சுக சனகாதியரும் நாரதரும்
அமரேந்திரனும் கரம் பணிந்தேத்திட
சமமென தனக்கொருவரில்லாத தேவனே
குமரனும் கணபதியும் நேசிக்கும் மாமனே
கமலாசனனையும் காமனையும் படைத்தவனே
உமையொருபானுமுமையும் பணிபவனே
சமரம் பல புரிந்து அசுரரையழித்தவனே
மாமறைகள் போற்றும் தாமரைப் பாதனே
ஆமருவியப்பனே ஆனிரைகள் மேய்ப்பவனே
பூமகளலைமகள் இருபுறமுடையவனே
பூமண்டலம் போற்றும் ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment