குடந்தை நகர் வளர்…
பல்லவி
குடந்தை நகர் வளர் மடந்தையே மங்களாம்பிகே
படமெடுத்த பாம்பணிந்த தேவியுனைப் பணிந்தேன்
அனுபல்லவி
கிடந்துறங்கும் சாரங்கன் கேசவன் சோதரி
விடமுண்ட கண்டன் கும்பேசனருகிருக்கும்
சரணம்
தடம் புரண்டு இங்குமங்கும் அலைபாயும் மனக்குரங்கை
அடக்கிட வேண்டுமெனத் தாயேயுனைத் துதித்தேன்
இடங்கொண்ட நாயகியே மருவார் குழலியே
உன்னிடம் சரணடைந்தேன் எனக்கருள் புரிவாய்
No comments:
Post a Comment