அழகன்….
பல்லவி
அழகன் கண்ணனை கண்ணாரக் கண்டேன்
பழகு தமிழ் மொழியில் பாடல் புனைந்தேன்
அனுபல்லவி
குழலேந்தும் கரங்களும் மயில்பீலிக் கொண்டையும்
கழல்களில் தண்டையும் கால் கொலுசுமணிந்த
சரணம்
அழகு மலர் மாலைகளும் அணி மணி ஆரங்களும்
குழையணிந்த செவிகளும் பட்டுப் பீதாம்பரமும்
அழகுடனணிந்தக் கேசவனை மாதவனை
சுழல் சக்கரமேந்தும் வெண்ணையுண்ட வாயனை
No comments:
Post a Comment