அனைவரும் அடிக்கடி கேட்டும் பாடியும் அனுபவித்த
ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தின் தியான ஸ்லோகங்களில் கடைசி பகுதியில்
ஸகுங்கும விலேபனாம் என்ற ஸ்லோகமும் இந்த திரிபுரசுந்தரி அஷ்டகத்தின் ஸ்லோகமே
திரிபுரை ,முப்புரை திரிபுரசுந்தரி என்று பெயர் விளங்கும் தேவியின் வடிவம் பெரும்பாலும் அருண நிற வடிவான ஸ்ரீ லலிதாம்பிகையை வர்ணிக்கும் நாமாவாகும்
இங்கோ, ஷாட்ஷாத் ஸ்ரீ மீனாக்ஷி திரிபுரசுந்தரியை போற்றி புகழ்வது போலவே திகழ்கிறது இந்த அஷ்டகம்..
எட்டு ஸ்லோகங்கள்
1.கதம்பவன காட்டிலுலவுபவளும் முனிவர்களால் கருணாநிதி என சேவிக்க படுபவளும் புதிய தாமரை பூத்தாற் போல கண்கள் உடையவளும் அபினவமான சியாமள நிறம் கொண்டவளும் தேவமங்கையர்களால் துதிக்க படுகின்றவளுமான
ஸ்ரீ மீனாக்ஷி திரிபுரசுந்தரி போற்றி
2.கதம்பக்காட்டில் வசிப்பவளும் ஸ்வர்ணத்தாலான வல்லகீ வீணைமீட்டுபவளும் உயர்ந்த மணிகளால் மின்னும் ரத்த ஆரங்கள் தரித்தவளும் ஒளிமயமான திருமுகம் உடையவளும் அதியற்புதமான த்ரிநேத்ரங்கள் உடையவளும் காருண்ய குணம் என்பதை கார்மேகம் போல வருஷிக்கின்றவளும் ஆன ஸ்ரீ மீனாக்ஷி திரிபுரசுந்தரி போற்றி
3.கடம்ப விருக்ஷங்களின் இடையே விளையாட்டாக உலவி நமது இன்னல்களை கலைபவளும் மலைகள் போன்ற தனங்களை மாலைகள் மறைத்திருக்க கன்னங்கள் பவளம் போல் சிவந்து விடும் படியாக மதுரகானம் இசைக்கின்றவளும் சியாமள தேகமுடையவளும் ஆன ஸ்ரீ மீனாக்ஷி திரிபுரசுந்தரி போற்றி
4.கதம்பாரண்யங்களின் மத்தியில் இருப்பவளும் தங்கத்தாலான ஆறடுக்கு தாமரைகளின் மீது வீற்றிருப்பவளும் சந்திர சூடாமணி தரித்து தன்னழகுக்கு ஒத்த சிவந்த செம்பருத்தி பூவின் மீதே மோஹித்திருப்பவளுமான ஸ்ரீ மீனாக்ஷி திரிபுரசுந்தரி போற்றி
5.வீணையை மார்போடு அணைத்திருப்பவளும், பத்மத்தின் மீது மதுரமான சிவந்த கண்களோடு மன்மதனின் பகைவரான மகேஸ்வரன் மனதை மோஹிக்க செய்கின்றவளும் தேனினும் இனிய நன்மொழியாளான மதங்கமுனி தவப்புதல்வியே ஸ்ரீ மீனாக்ஷி திரிபுரசுந்தரி போற்றி
6.சிந்தாமணி பட்டு தரித்து ( நீலத்தில் அரக்கு வண்ணம் கலந்த)மன்மத புஷ்ப பாணத்தை கையிலே ஏந்தியவளும் மதுப்பாத்ரமேந்தி மயக்கும் கண்கள் உடையவளும் கனமான தனங்களுடையவளுமான ஸ்ரீ சியாமள மீனாக்ஷி திரிபுரசுந்தரி போற்றி
7.குங்குமப்பூச்சு தரித்தவளும், வண்டுகள் நாடும் கஸ்தூரி பூசியிருப்பவளும், புன்னகை பூத்த பார்வையுடையவளும், அம்பு, வில், பாசம், அங்குசம் தரித்தவளும், எல்லா உயிர்களையும் மோகிக்கச் செய்பவளும், செம்பருத்திப் பூவின் நிறமுடையவளுமான ஸ்ரீ மீனாக்ஷி திரிபுரசுந்தரி போற்றி
8. ஸ்ரீபுரத்தை ஆள்கின்றவளே! இந்திர பத்நீ பின்னல்ஜடை முடிய விஷ்ணு தேவியான மஹாலக்ஷ்மி ஆபரணங்கள் பூட்ட சரஸ்வதி தேவி மணக்கும் சந்தனம் பூச தேவர்களும் தேவ மங்கையரும் நின் அடிபணிந்து சேவைகள் புரிந்திருக்க கண்களாலே கடாக்ஷிப்பாயே
ஸ்ரீ மீனாக்ஷி திரிபுரசுந்தரி போற்றி போற்றி...
கதம்ப வந சாரிணீம் முனிகதம்பகாதம்பிநீம்
நிதம்பஜிதபூதராம் ஸுரநிதம்பிநீபூஜிதாம் I
நவாம்புருஹலோசநாம் அபிநவாம்புத ச்யாமலாம்
த்ரிலோசன குடும்பிநீம் த்ரிபுரஸுந்தரீமாச்ரயே II
கதம்பவந வாஸினீம் கனகவல்லகீ தாரிணீம்
மஹார்ஹமணிஹாரிணீம் முகஸமுல்லஸத்வாருணீம்
தயாவிபவ காரிணீம் விசதரோசனாசாரிணீம்
த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுரஸுந்தராமாச்ரயே II
கதாம்பவனசாலயா குசபரோல்லன்மாலயா
குசேபமிதசைலயா குருக்ருபாலஸத்வேலயாI
மதாருணகபோலயா மதுரகீத வாசாலயா
கயாபி கனலீலயா கவசிதா வயம் லீலயாII
கதம்பவனமத்யகாம் கனகமண்டலோபஸ்திதாம்
ஷடம்புருஹ வாஸினீம் ஸததஸித்த ஸெளதாமினீம்
விடம்பிதஜபாருசிம் விகர சந்த்ர சூடாமணிம்
த்ரிலோசன குடும்பினீம், த்ரிபுரஸுந்தரீமாச்ரயே II
குசாஞ்சித விபஞ்சிகாம் குடிலகுந்தலாலங்க்ருதாம்
குசேசய நிவாஸினீம் குடிலசித்தவித்வேஷிணீம் !
மதாருண விலோசனாம் மனஸிஜாரிஸம்மோஹினீம்
மதங்கமுனிகன்யகாம் மதுரபாஷிணீமாச்ரயே II
ஸ்மரேத் ப்ரதமபுஷ்பிணீம் ருதிரபிந்து நீலாம்பராம்
க்ருஹீதமது பாத்ரிகாம் மதவிகூர்ணநேத்ராஞ்சலாம் I
கனஸ்தனபரோந்நதாம் கலித சூலிகாம் ச்யாமலாம்
த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுர ஸுந்தரீ மாச்ரயே II
ஸகுங்கும் விலேபனாம் அலகசும்பி கஸ்தூரிகாம்
ஸமந்தஹஸிதேக்ஷணாம் ஸதரசாப பாசாங்குசாம் I
அசேஷஜன மோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸுப பாஸுராம் ஜபவிதௌ ஸ்மராம்யம்பிகாம் II
புரந்தர புரந்த்ரகா சிகுரபந்த ஸைரந்த்ரிகாம்
பிதாமஹபதிவ்ரதா படுபாடீரசர்சாரதாம் I
முகுந்த ரமணீமணீ லஸதலங்க்ரியா காரிணீம்
பஜாமி புவம்பிகாம் ஸுரவதூடிகா சேடிகாம்
கதம்பவனத்தமர்ந்து…..
பல்லவி
கதம்பவனத்தமர்ந்து மூவுலகுமாட்சி செய்யும்
லலிதா திரிபுரசுந்தரியைத் துதித்தேன்
அனுபல்லவி
பதம் பணிந்தோர் நலம் காக்கும் கேசவன் சோதரியை
நுதலில் பிறையணிந்த அகில லோக நாயகியை
சரணங்கள்
கதம்ப வனத்துறையும் கார்வண்ண நிறத்தாளை
இதமுடன் முனிவர்கள் தேவ கன்னிகைகள்
துதித்திடுமரவிந்த லோசனியை முக்கண்
முதல்வன் குடும்பத்து சுந்தரியைப் பணிந்தேன்
கதம்பக் காடுறையும் முதம் தரும் முகத்தாளை
விதம் விதமான அணிமணிகள் புனைந்தவளை
பொன்மயமான யாழேந்தும் கரத்தாளை
சதா கருணை மழை பொழிபவளைத் துதித்தேன்
கதம்பவன உலகில் சஞ்சரிப்பவளை
மதர்த்த மலை போன்ற மார்பினை மறைத்து
புது மாலையணிந்த கன்னம் சிவந்தவளை
முக்கண்ணியை கருநிறத்தாளைத் துதித்தேன்
கதம்ப வனம் நடுவே பொன்மேரு பீடத்தில்
விதமாறு தாமரை மலர் மீதமர்ந்தவளை
சததம் புண்ணியர்க்கு மின்னலொளி தருபவளை
புதுப்பிறையணிந்த திரபுரையைப் பணிந்தேன்
சதமும் மார்புடன் யாழை அணைத்தவளை
பதுமத்தின் மீதமர்ந்த மதுர விழியாளை
மதன் வைரி மோகிக்கும் தேன் மொழியாளை
மாதங்கியைக் கருங்குழலாளை வணங்கினேன்
மதுக்கிண்ணமேந்திய சிந்தாமணிப் பட்டணிந்த
புதுப் பொலிவுடைய கலைந்த குழலுடையவளை
மதனின் மலர்க் கணையேந்தும் திரிபுரசுந்தரியை
ததும்பும் தனமுடையவளை அனுதினம் தொழுதேன்
குதுகலத்துடனே குங்குமப்பூச்சும்
மது வண்டு நாடும் கஸ்தூரியுணிந்தவளை
புதுமலர்க் கணைவில் பாசாங்குசமேந்தும்
பதுமையை செம்பட்டணிந்தவளைத் துதித்தேன்
விதம் விதமாய் பின்னலிட இந்திரனின் நாயகியும்
சதுர்முகன் தேவி சந்தனம் பூசவும்
புதுப் புது அணி புனைய கேசவன் துணைவியும்
நிதம் பணிபுரியும் தேவகுலப் பெண்களுடன்
No comments:
Post a Comment