அருள் தரும் ……
பல்லவி
அருள் தரும் முருகனை முத்துக்குமரனை
திருமால் கேசவன் மருகனைத் துதித்தேன்
அனுபல்லவி
உருவம் ஆறாகப் பிறந்தவன் ஆறுமுகன்
குருவாகித் தந்தைக்கு மறைபொருள் சொன்னவன்
சரணம்
திருப்பரங்குன்றம்தனில் சுப்பிரமணியன்
மருதமலைதனிலே அவன் பெயர் முருகன்
திருவாவினங்குடியில் அழகன் வேலாயுதன்
தென் பழனிப் பதியிலவன் தண்டாபாணி
திருவேரகத்தில் தகப்பன் சாமியெனவும்
திருத்தணிப்பதியில் தணிகாசலனெனவும்
திருச்செந்தூரில் சேவற்கொடியோனெனவும்
பெருமையுடன் விளங்கும் அறுபடைவீடுடைய
No comments:
Post a Comment