நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழிய தாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இன்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்…
என்னாளுமெப்போதும்…..
பல்லவி
என்னாளுமெப்போதும் மனமாரத்துதித்து
சொன்னாலும் போதும் ராமா என்றிரண்டெழுத்தை
அனுபல்லவி
தன்னாலே நன்மைகளனைத்தும் சேரும்
இன்னல்கள் தீர்க்குமந்த கேசவன் நாமம்
சரணம்
கன்ம வினைப்பயன்கள் பாவங்கள் தீரும்
ஜென்மம் மரணமெனும் பவச்சுழல் நீங்கும்
நன்மையும் செல்வமும் நல்வாழ்வும் பெருகும்
இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் கிடைத்திடும்
நாடிய பொருள் கைகூடும் ஞானம் புகழ் பெருகும்
வீடு சிறப்புறும் திருமகள் அருள் சேரும்
நீடிய அரக்கர் சேனை தனை வென்று வாகை
சூடிய ஶ்ரீ ராமனை சீதையின் நாயகனை
No comments:
Post a Comment