Friday, 18 February 2022

தாயருடனிருக்கும்



 *பார்த்தேன் பரவசித்தேன் பாடல்      புனைந்தேன்*


  தாயருடனிருக்கும்….

       பல்லவி

தாயாருடனிருக்கும் ஶ்ரீ நிவாசனை

  மாயோனைக் கேசவனை மனமாரத்துதித்தேன்

       அனுபல்லவி

 காயாம்பூ வண்ணனைக் கமலக்கண்ணனை

தேயாத புகழ் மேவும் திருவேங்கடத்தானை

           சரணம்

 ஓயாதவன் நாமம் வாயார ஓதினேன்

 தூய மலர் தூவி தினமவனைத் துதித்தேன்

 சேயெனக்கருள வேண்டுமென எடுத்துறைக்க  

தாயவளின் தயவை கோரிப் பணிந்தேன்

No comments:

Post a Comment