भुवनजननि भूषाभूतचन्द्रे नमस्ते
कलुषशमनि कम्पातीरगेहे नमस्ते ।
निखिलनिगमवेद्ये नित्यरूपे नमस्ते
परशिवमयि पाशच्छेदहस्ते नमस्ते ॥
புவன ஜனநி பூஷாபூத சந்திரே நமஸ்தே
கலுஷசமநி கம்பாதீரகேஹே நமஸ்தே|
நிகிலனிகமாவேத்யே நித்யரூபே நமஸ்தே
பரசிவமயி பாசச்சேதஹஸ்தே நமஸ்தே||
உலகனைத்தும் பெற்றவளே, கருபெறாதீன்ற கன்னியே ! துண்டுப்பிறையை, தலைக்கு அணியாய்க் கொண்டவளே தாயே உனக்கு நமஸ்காரம் . பாபங்களையும், அதனால் ஏற்படும் தோஷங்களையும் அழிப்பவளும், கம்பா நதிக் கரையில் கோவில் கொண்டவளுமான காமாக்ஷி அன்னையே நமஸ்காரம். எல்லா வேதங்களும் தேவியை பிரதிபாதனம் செய்கிறது. வேத வேத்யாவாகி வேதங்களால் அறியத் தக்கவளும் தன்னை அறிவிக்கும்.நூல்களாக வேதங்களைப் படைத்தவளும், எப்போதும் நிலைத்து நிற்பவளுமான தேவிக்கு நமஸ்காரம். தாயே சிவனும் நீயே ! உன்னில் சிவத்தைக் காண்கிறேன். ஸத் தை விட்டுப் பிரியாத சித்தாகவே பாசத்தையும், அங்குசத்தையும் கைகளில் தாங்கியிருந்தாலும்(பாசஹஸ்தா, பாசஹந்த்ரி ) பாசங்கள் என்னும் அவித்யை யைஅழிப்பவள்! அத்தகைய தேவிக்கு நமஸ்காரம் !!
மூக பஞ்சாசதியில் ஸ்துதி சதகத்தில் 99 வாது ஸ்லோகம் இது . அம்பாளையும் சிவனையும் ஒன்றாக வழிபடுமாறு அமைந்துள்ளது ! இதனை விடாது பாராயணம் செய்தால் அம்பாள் ,பெரியவா தரிசனம் கிட்டும் என்பது ஆன்றோர் கருத்து !
நிலவின் பிறையணிந்த….
பல்லவி
நிலவின் பிறையணிந்த உலக நாயகியே
உலகனைத்தும் படைத்தவளே உன்னையே துதித்தேன்
அனுபல்லவி
நிலையிலா உலகில் நிலைத்திருப்பவளே
கம்பாநதிக்கரையில் வீற்றிருப்பவளே
சரணம்
நேசமுடன் பணியும் மாசறு பக்தர்களின்
பாசத்தளைகளைக் களைந்திடும் கரத்தாளே
ஈசன் வடிவே கேசவன் சோதரியே
ஆசறு மறையாய் மறைபொருளாயிருப்பவளே
No comments:
Post a Comment