நீயிருக்க பயமில்லை…
பல்லவி
நீயிருக்க பயமில்லை தணிகைவளர் வேலா
யாமிருக்க பயமென்ன என்றவனே முருகா
அனுபல்லவி
தாயினும் பரிவுடனே காப்பவனே கந்தா
சேயெனவே நினைந்து உனைப்பணிந்தேன் குமரா
சரணம்
ஆயிரம் நாமம் கொண்ட கேசவனின் மருகா
தீயேந்தும் முக்கண்ணன் மகனே சிவகுமரா
தேயாத புகழ்மேவும் பழனி வாழ் உமை பாலா
நோயாம் வெம்பவப்பிணி நீங்கிடவே உனைத்துதித்தேன்
No comments:
Post a Comment