சாரதா சாரதாம்போஜ வதனா வதானாம்புஜே |
ஸர்வதா ஸர்வதாsஸ்மாகம் ஸன்னிதிம் ஸன்னிதிம் க்ரியாத் ||
வரங்களை அள்ளிக் கொடுப்பவளும், சந்திரனுக்கு நிகரான முகப்பொலிவு உடையவளும், எப்பொழுதும் வேண்டியதைக் கொடுப்பவளுமான தேவி சாரதா, எனக்கு மங்களகரமான ஞானம் அருளட்டும்.
சாரதா தேவியுன்….
பல்லவி
சாரதா தேவியுன் சீரடி பணிந்தேன்
பாரெலாம் புகழ் விளங்கும் பரதேவதையே
அனுபல்லவி
பூரண நிலவென முகப்பொலிவுடையவளே
கோரின வரமும் ஞானமுமளிப்பவளே
சரணம்
நாரதர் நான்முகன் நமச்சிவாயன் கேசவன்
வாரணமுகன் முருகன் கரம்பணிந்தேத்தும்
ஆரணப்பொருளே அனைத்துக்கும் முதலே
நாரணி நான்முகி நாயகியும் நீயே
No comments:
Post a Comment