மலைராஜனின் பெண்ணான அம்பாள் காமாக்ஷி தன் பாத ஒளியால் நாற்புறமும் அதாவது எல்லாத் திசைகளையும் ஒளி மயமாகச் செய்கிறாள் ! செக்கச் சிவந்த நிரமாக்குகிறாள். தேவியின் திருவடி உத்திதெழு ம் பால சூரியனுடைய கிரணங்களுக்கு மூல திரவியமாக இருப்பதோடு, தேவேந்திரன் திசையாகிய கிழக்குத்திசையில் சூர்யன் தன் கிரணங்களைப் பரப்புவது போல் அம்பாளின் திருவடிகள் தன்னை வணங்குவோர் ஆசையை நிறைவு செய்கிறது !! தேவியின் பாத
செவ்வொளி அஞ்ஞானம் என்ற அக இருளை அழிக்கிறது! கிழக்கு மட்டுமல்லாது எல்லாத்திசைகளிலும் உள்ள அனைத்து தேவருக்கும் மெய்ஞ்ஞானம் என்ற ஒளியை அளிக்கிறது ! அழகான உவமை அம்பாள் பாதத்தோடு சூர்ய ஒளியை ஒப்பிடுவது !
ஜய ஜய ஜகதம்ப சிவே.....
அதிசயமான..,,,
பல்லவி
அதிசயமான மலைமகள் நாற்புரமும்
பத ஒளியால் செந் நிறமாகச் செய்கிறாள்
அனுபல்லவி
துதிப்பவர்க்கெல்லாம் அஞ்ஞான இருள் போக்கி
மெய்ஞானம் தருமந்தக் கேசவன் சோதரி
சரணம்
இ்ந்திரனின் கிழக்கு திசையில் ஒளிபரப்பும்
சுந்தர சூரியனின் கிரணங்கள் போலவே
சுந்தரி காமாக்ஷி அடியர்க்கு அருளொளி
தந்தவர் விருப்பங்களை நிறைவேற்றுகின்றாள்
No comments:
Post a Comment