பத்தரை மாற்று….
பல்லவி
பத்தரை மாற்றுப் பசும்பொன் நிறத்தாளே
அத்தன் சிவபெருமான் இடமமர்ந்த நாயகியே
அனுபல்லவி
உத்தமியே ரத்தினமே கேசவன் சோதரியே
தத்தையைக் கையிலேந்தும் முத்தே மரகதமே
சரணம்
முத்துக்குமரனுக்கு வேல் தந்த அன்னையே
தத்துப் பிள்ளைக்குப் பாலூட்டியே தாயே
முத்தமிழ் வளர்த்த மதுரை வளர் மீனாக்ஷி
பக்தனெனை க்காத்தருள்வாய் தேவி அங்கயற்கண்ணி
No comments:
Post a Comment