மருத்துவனாய்….
பல்லவி
மருத்துவனாய் வந்தென் வருத்தம் தீர்த்தவனே
அருமருந்தே ஶ்ரீ ராமா திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
தருமநெறி காக்க தரணியிலவதரித்த
திருமாலே கேசவனே தீனருக்கருள்பவனே
சரணம்
வருமிடர் தீர்த்து வாஞ்சையுடன் காப்பவனே
இருவினைப் பயன்கள் நீங்கிடச் செய்பவனே
கருமணியே கணப்புரத்தரசே இன்னமுதே
கருமா முகில் வண்ணா வீர ராகவனே
No comments:
Post a Comment