சொல்லாலெவரையும்…..
பல்லவி
சொல்லாலெவரையுமடித்தேனோ ராமா
“பல்வலி” தந்தெனைப் பரிதவிக்கச்செய்தாயே
அனுபல்லவி
கல்லாலடித்ததையும் காலாலுதைத்ததையும்
எல்லாமந்த சிவன் பொறுத்தருளவில்லையா
சரணம்
வல்லவனே கேசவனே பக்தரைக் காப்பவனே
பொல்லா அரக்கரை மாய்தவனே ரகுராமா
எல்லாமறிந்தவனே ஏழைப்பங்காளனே
அல்லலுறுமெனக்கருள உன்னையே துதித்தேன்
No comments:
Post a Comment