எத்தனை……
பல்லவி
எத்தனை முறையுனைப் பார்த்தாலும் மனம்
பக்திப் பரவசமாகுதே தாயே
அனுபல்லவி
நித்தமுமுனைத் துதித்தேன் கேசவன் சோதரி
அத்தன் சிவனை ஆளும் சிவையே
சரணம்
உத்தமி உனைக் காணும் போதெல்லாம்
பித்துப் பிடித்தாற் போலாகுது என் மனம்
சித்தத்தில் நீயிருந்து ஆட்டி வைக்கும்
சத்தமென் காதுவரை கேட்கிறதே
புத்தம் புது மலரே மதுரகாளியே
மொத்தத்திலனைத்தும் நீயெனவே
வித்தகர் ஞானியர் யோகியர்கள்
சத்தமாயுரைப்பதை நானறிந்தேன்
No comments:
Post a Comment