மதங்கர் குலவிளக்கே….
பல்லவி
மதங்கர் குலவிளக்கே மாதே மாதங்கி
பதமலர் பணிந்தன் முதம் பெற வேண்டியே
அனுபல்லவி
கதம்ப வனத்தமர்ந்தவளே கேசவன் சோதரி
சிதம்பர நாதன் மனங்கவரீச்வரி
சரணம்
இதந்தருமிவ்வுலக பந்தங்களெதும்
சதமல்ல என்றறிந்தே மதுரமொழியாளே
நிதமுனத்துதித்தேன் நித்ய கல்யாணி
உதவிட வேண்டுமென உனையே துதித்தேன்
No comments:
Post a Comment