இறைவனை மட்டும் நம்புங்கள். இறைவனை மட்டுமே நம்புங்கள். அவன் நம் கற்பனைக்கு அடங்காத சக்தி படைத்தவன். இறைவன், மதங்கள் மொழிகள் இனங்கள் பிரிவுகள் பெயர்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவன். எவ்வாறு சூரியன் அனைவருக்கும் பொதுவோ அதே போல இறைவனும் அனைவருக்கும் பொதுவானவன். இறைவனை மட்டுமே உங்கள் வாழ்வின் துணையாகக் கொள்ளுங்கள். பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் குழந்தை எவ்வாறு அன்றைய பாடசாலை நிகழ்வுகலை எல்லாம் தன் தாயிடம் ஆவலுடன் சொல்லுமோ, அதேபோல நீங்களும் அனைத்தையும் இறைவனிடமே சொல்லுங்கள். இன்பமோ துன்பமோ அவனிடமே சொல்லுங்கள். மகிழ்ச்சியையும் அவனிடமே பகிருங்கள். துன்பத்தையும் அவனிடமே சொல்லி அழுங்கள். உங்கள் துன்பங்களுக்கு இறைவன் விடை தருவானோ இல்லையோ, மனிதரைப்போல மற்றவரிடம் உங்களைப்பற்றி சொல்லி நகைக்காமல் கட்டாயம் உங்களுக்கு ஆறுதல் தருவான்.
பரதேவி கேசவன்….
பல்லவி
பரதேவி கேசவன் ஈசனென நாமறியும்
இறைவனிடம் மட்டுமே நாம் சரணடைவோம்
அனுபல்லவி
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மனமாரத் துதித்து
பரம்பொருளை வேண்டி அனுதினம் பணிந்து
சரணம்
பேதமின்றி அனைவருக்கும் ஆதவனொளி தருவதுபோல்
மதம் மொழி இனமெனும் பேதங்களற்றவன்
மாதா பிதாவிடம் குறைகளையுரைப்பது போல்
நாதனவனிடம் நம் குறைகளை முறையிடுவோம்
ஆதரவளித்து நிழல் தந்து காப்பவன்
ஏதமிலாதவன் கருணை உடையவன்
தீதொன்றுமணுகாமல் நமக்கருள் புரிபவன்
பூதலத்தோர்க்கு வரமெனக் கிடைத்தவன்
“Part 2” for Madhyamar
கடவுளை மட்டுமே நம்புங்கள். கடவுள் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் பொது. ஆண்டவன் ஆதவன் போல ஒருவரிடமும் பேதம் பார்ப்பதில்லை. ஆண்டவன் முன்னே அனைவரும் சமம். ஒரு தாயிடமோ தகப்பனிடமோ ஒரு மகனோ/ மகளோ சென்று முறையிடுவது போல அந்தப் பரம்பொருளிடம் முறையிடுங்கள். வேறெறிடம் நம் குறை சொன்னால் அவர் நீலிக் கண்ணீர் வடிப்பதோடு கேலி செய்யவும் வாய்ப்புண்டு. ஆதலால் உங்கள் நிறை,குறைகளை தெய்த்துடனேயே பங்கிட்டுக்கொள்ளுங்கள். அவன் கண்டிப்பாக கருணை காட்டுவான். இல்லையெனினும் நிச்சயம் நம்மை கேலி செய்ய மாட்டான். நம்பிக்கையுடனே அவனை நாடுங்கள். அவன் இனம்,மதம்,மொழி, ஆண்,பெண்,என பேதம் பாரப்பதில்லை. கடவுள் கருணையே நிறைந்தவன். நம்மை ப்படைத்தவனே அவன்தானே. தாயே தன் மகவை வெறுப்பதுண்டோ! ஆக அந்த கருணைப் பெட்டகத்திடம் உங்கள் நிறை குறைகளை முறையிடுங்கள். ஈசனென்றும் நம் நேசன். கடவுளை நம்பினோர் கைவிடப் படாரென்பது நான்மறைத் தீர்ப்பு. ஆதலாலுங்கள் காதலையும் மோதலையும் கடவுளிடமே சொல்லுங்கள். இதோ சான்றாக க்கவியரசரின் வைர வரிகள்.
“ ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான் “
No comments:
Post a Comment