வேற்றுமையின்றி….
பல்லவி
வேற்றுமையின்றி ஒற்றுமையாய்த் துதிப்போம்
போற்றுதற்குரிய அரியையும் அரனையும்
அனுபல்லவி
மாற்றுக் கருத்து நமக்கினி வேண்டாம்
ஏற்றமிகு சிவனும் கேசவன் நேசனே
சரணம்
நாற்றிசையும் உள்ளார் நாரணனும் சிவனும்
போற்றித் துதித்திடும் பக்தருக்கெல்லாம்
கைலாயமென்பது கைக்கெட்டும் தூரமே
வைகுண்டம் என்பது கூப்பிடும் தூரமே
No comments:
Post a Comment