லலிதேதி ஸதா ஸ்நாநம்
லலிதேதி ஸதா ஜப:
லலிதேதி ஸதா த்யானம்
ஸதா லலிதா கீர்த்தனம்
லலிதாஹி ஜகன்மாதா
லலிதாஹி ஜகத்பிதா
லலிதாஹி ஜகத்தாத்ரா லலிதாஹி ஜகத்ஸர்வம் !
தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ !
எப்போதுமுனை…
பல்லவி
எப்போதுமுனைத் துதித்தேன் ஶ்ரீ லலிதாம்பிகையே
முப்போதுமுன் நாமமே யுரைத்தேன் தாயே
அனுபல்லவி
அப்பாலுக்கப்பால் விளங்கும் ஆதியே சோதியே
தப்பேதுமிலாத கேசவன் சோதரியே
சரணம்
அப்பன் சதாசிவன் மீதமர்ந்தாட்சி செய்பவளே
ஒப்பிலாதவளே ஓங்காரப் பொருளே
அப்போதைக்குப்போதே நாமங்கங்கள் சொல்லி வைத்தேன்
முப்பெருந்தேவியே திரிபுரசுந்தரியே
உண்பதுமுடுப்பதுமவள் நாமம் சொல்லியே
எண் திசைகளிலுமிருக்கும் லலிதாம்பிகையே
அன்னையும் தந்தையும் ஶ்ரீ லலிதாம்பிகையே
காண்பதனைத்திலும் நீயே ஶ்ரீலலிதே
No comments:
Post a Comment