ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹித வபு:
வினம்ராணாம் ஸௌம்ய: குருரபி
கவித்வம் ச கலயன்|
கதெள மந்தோ கங்காதர மஹிஷி காமாக்ஷி பஜதாம்
தம: கேதுர் மாதஸ்தவ சரண பத்மோ விஜயதே ||
கங்காதரரான பரமசிவனின் தேவி காமாக்ஷியின் திருவடித் தாமரையானது மிக்க ஒளிகொண்டதால் ஸூர்யன் ஆகவும், அமிர்தமயமாய் உள்ளதால் சந்திரனாகவும் , சிவப்பு நிறத்தால் செவ்வாயாகவும், தன்னை பூஜிப்பவர்களுக்கு ஸௌம்யம் பொருந்திய புதனாகவும், புத்திமான் என்ற ரீதியில்குருவாகவும் , கவித்தன்மையால் சுக்கிரனாகவும், மந்த நடையால், சனியின் தன்மையும், தன்னைப் பூஜிப்பவர்கள் அஞ்ஞானத்தை அழித்து, ஞானம் அளிக்கும் தன்மையில் ராகு, கேதுவாகவும் ஆக நவக்ரஹங்களாகளுமாய் சிறந்து விளங்குகிறது தேவியின் திருவடிகளைப். பூஜிப்பவர்கள் நவக்ரஹங்களப்பூஜிக்கும் பலன் அடைகிறார்கள் திருஞானசம்பந்தர் இயற்றிய கோளறு பதிகம் , அருணகிரியார் செய்த நாள் என் செயும் அலங்காரப் பாடல் இதே கருத்துடையவை.! | காமாட்சி சரணம்..
दधानो भास्वत्ताममृतनिलयो लोहितवपुः विनम्राणां सौम्यो गुरुरपि कवित्वं च कलयन् ।
गतौ मन्दो गङ्गाधरमहिषि कामाक्षि भजतां तमःकेतुर्मातस्तव चरणपद्मो विजयते ॥
கங்காதரன்…..
பல்லவி
கங்காதரன் சிவனின் நாயகியே காமாக்ஷி
மங்களம் தந்தருள்வாயென உனைத் துதித்தேன்
அனுபல்லவி
செங்கண்மால் கேசவன் சோதரி சங்கரி
பொங்கரவணிந்தவளே புவனம் காப்பவளே
சரணம்
பங்கயத் திருவடி திங்களால் அமுதாகவும்
செங்கதிரோன் ஒளியால் ஆதவனாய்த் திகழவும்
சிவந்த நிறத்தால் செவ்வாயாய் விளங்கிடவும்
துதிப்பவர்க்கு புதனெனவும் புத்தியால் குருவென்றும்
கவியழகால் வெள்ளியுமாய் மந்த நடை சனியுமாய்
வணங்குவோர் ஞானம் பெற ராகு கேதுவுமாய்
அவனியோர் நலம் பெற கோள்களனைத்துமாய்க்
காட்சி தரும் தேவியுன் அரவிந்த பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment