வலி பொறுக்க முடியாமல்…
பல்லவி (1)*
வலி பொறுக்க முடியாமல் உனையே அழைத்தேன்
வலிமை படைத்தவனே ஶ்ரீ ரகுராமா …… ( பல்….,)
பல்லவி ( 2 )*
வலி பொறுக்க முடியாமல் உனையே அழைத்தேன்
வலிமை படைத்தவனே ஶ்ரீ ரகுராமா …….. ( கலியின்…)
அனுபல்லவி
நலிவுற்றோர் நலம் பேணும் கேசவனே மாதவனே
சலிப்படையாமலெனைக்காக்க வருவாயே
சரணம்
புலியெனப் பாய்ந்து போரில் ராவணனை
பலியாக்கிப் பாரினில் அழியாப் புகழ் பெற்றாய்
எலிக்கடவுளருள் பெற்ற சீதாராமனே
நிலையிலா உலகில் நிலைத்திருப்பவனே
*பல்லவி(1) கடும் வலியின் போது பாட😭
*பல்லவி (2) வலியேதுமில்லாத போது பாட😂
No comments:
Post a Comment