Thursday, 10 February 2022

கண்டேன்

 


“ பார்த்தேன்,ரசித்தேன், பாடல் புனைந்தேன்”🙏


     கண்டேன்….


       பல்லவி


கண்டேன் கண்ணனைப் பரவசமானேன்

வெண்ணையுண்ட வாயனைக் கேசவனை மாதவனை


         அனுபல்லவி


அண்டசராசரங்களனைத்தையும் அவனே

மண்ணையுண்ட வாயில் அன்னைக்குக் காட்டியவன்


            சரணம்


சண்டையிட்டு விளையாட்டாயரக்கரையழித்தவன்

தண்டனிட்ட பார்த்தனுக்கு கீதையை உரைத்தவன்

கண்டவர் மனம் களிக்கச் செய்திடும் பேரழகன்

பண்டு கோபியர்களுடனாடிக் களித்தவன்  


தண்மதி முகத்தினன் தாமரை நாபன்

எண்ணித் துதிப்பவர்க்கு கண்ணெதிரில் காட்சிதரும்

விண்டுரைக்க இயாலாத தத்துவப் பொருளவன்

தொண்டருக்கு கலியுகத்தில் அவனே ஆண்டவன்🙏🙏🙏


“நாராயண,நாராயண,நாராயண,🙏

No comments:

Post a Comment