Thursday, 3 February 2022

திருவடி பணிந்தேன்

 

मातः क्षणं स्नपय मां तव वीक्षितेन

मन्दाक्षितेन सुजनैरपरोक्षितेन 

कामाक्षि कर्मतिमिरोत्करभास्करेण
श्रेयस्करेण मधुपद्युतितस्करेण 45

மாத: க்ஷணம் ஸ்னபய மாம் தவ வீக்ஷிதேன
மன்தாக்ஷிதேன ஸுஜனைரபரோக்ஷிதேன |
காமாக்ஷி கர்மதிமிரோத்கர பாஸ்கரேண
ஶ்ரேயஸ்கரேண மதுப த்யுதி தஸ்கரேண ||45||

தாயே காமாக்ஷீ! சற்றே மென்மையும், நாணமும் கூடி தாழ்ந்ததும், நல்லோர்களால் நன்கு அறியப்பட்டதும், கர்மவினையாம் இருளைச் சூரியன்போல் அழிப்பதும், உயர்வை அளிப்பதும், வண்டுகளின் ஒளியைத் திருடியதுமான உன் கடைக்கண்ணினால் சிறிது நேரமாவது என்னை நீராட்டுவாயாக!

சற்றேமென் மையோடு தாழ்ந்து இருளைத் தகைவுடைத்தாம்;
சற்சனத் தோர்கள் தரிசிப்பாம்; அற்கன்போல் தம்கருமம்
உற்றவல் நீக்கும்; உயர்வீயும்; வண்டின் ஒளிதிருடும்;
சற்றக்கண் ணால்நனைத் தால்தாயே காமாட்சீ தண்ணுறுமே

தை நான்காம்  வெள்ளிக்கிழமை

மாத:க்ஷணம் ஸ்நபய மாம் தவ வீக்ஷிதேன
மந்தாக்ஷிதேன ஸுஜனை ரபரோக்ஷிதேன |
காமாக்ஷி கர்ம,திமிரோத்கர,பாஸ்கரேண
ஶ்ரேயஸ்கரேண, மது,பத்யுதி,தஸ்கரேண ||

மூக பஞ்ச சதீ....
கடாக்ஷ சதகம்....

பொருள் !

தாயே காமாக்ஷீ! சற்றே மென்மையும், நாணமும் கூடி தாழ்ந்ததும், நல்லோர்களால் நன்கு அறியப்பட்டதும், கர்மவினையாம் இருளைச் சூரியன்போல் அழிப்பதும், உயர்வை அளிப்பதும், வண்டுகளின் ஒளியைத் திருடியதுமான உன் கடைக்கண்ணினால் சிறிது நேரமாவது என்னை நீராட்டுவாயாக
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி  உமையவளே !


                                              திருவடி பணிந்தேன்…..

                                                      பல்லவி

                                       திருவடி பணிந்தேன் உனதருள் வேண்டியே
                                       பெருமைக்குரிய காஞ்சி வாழ் காமாக்ஷி

                                                    அனுபல்லவி
          
                                       திருவுறை மார்பன் கேசவன் சோதரி
                                       அறவோரமரர் முனிவர்கள் போற்றும்

                                                         சரணம்

                                      கரும வினையிருளை அழிக்கும் ஆதவனாய்
                                      கருவண்டொளி திருடும் நாணம் கொண்ட விழியருளால்
                                      பரிவுடன் எனைப் பார்த்து அன்னையே நீயும்
                                      சிறிதளவு நேரமெனை நீராட்டினால் போதும்
                                      

No comments:

Post a Comment